அர்ஜுன் மகேந்திரனின் பயணத் தடை நீடிக்கப்பட்டது!

36shares

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைதுசெய்யப்பட்டிருந்த பேர்பச்சுவல் டிசரிஸ் லிமிட்டட் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் இம்மாதம் 21ஆம் நாள்வரை பிறப்பித்து உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபர்களுக்கெதிரான வழக்கு இன்றையதினம் நீதிமன்றிற்கு வந்தபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

இதேவேளை அர்ஜுன் அலோசியஸ்ஸின் தந்தையும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிரான பயணத் தடையும் கோட்டை நீதவானால் அதே திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க