முகமாலைக்கு கம்போடிய கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் விஜயம் !

14shares

கிளிநொச்சி முகமாலையில் கண்ணிவெடி அக்றும் பிரதேசத்திற்குகம்போடிய கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் விஜயம் செய்துள்ளனர்.

நேற்று காலை விஜயம் செய்த அந்த குழுவினர் கண்ணி வெடி அகற்றும் பணியைபார்வையிட்டனர்.

கிளிநொச்சி,யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாவட்டங்களில் கடந்த 16வருடங்களான கண்ணி வெடி அகற்றும் பணியில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம்ஈடுபட்டுள்ளது.

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் மனிதாவிமான கண்ணிவெடிஅகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் இலங்கை உட்பட 23 நாடுகளில் தனது கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டைசெய்து வருகிறது.

கனடா அமரிக்கா யப்பான் மற்றும் பிரித்தானியாஆகிய நாடுகளின் நிதி பங்களிப்பில் புதிய தொழில் நுட்ப முறைகளை கையாண்டு கண்ணிவெடிஅகற்றி வருகிறது.

வடமாகாணத்தை சேர்ந்த 452ஆண் 296 பெண்களுமாக மொத்தமாக 748 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்

இந்நிலையிலேயே கம்போடிய கண்ணி வெடி அகற்றும் குழுவினர் முகமாலையின்பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தனர்.

இலங்கையில் வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணியை அவர்கள் பார்வையிட்டனர்.

கம்போடியாவும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக அதிகளவு கண்ணிஅபாயம் நிறைந்த நாடாக காணப்படுவதனால், ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வெற்றிக்கரமான கண்ணி வெடிஅகற்றும் செயற்பாடுகளை பார்வையிட குறித்த குழுவினர் வருகை தந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கண்ணிடி வெடி அகற்றும் நிலையத்தின் ஏற்பாட்டில் இந்தகுழுவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க