இரணைமடு நிரம்புகிறது! விவசாயிகள் மகிழ்ச்சி !!

  • Prem
  • November 08, 2018
36shares

வடக்கில் கடந்த சில தினங்களாக பெய்யும் பெருமழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் அதன் முழு கொள்ளவை எட்டும் வகையில் உயர்ந்து வருகிறது. இன்று அதன் நீர் மட்டம் 26.5அடியாக உயர்ந்துள்ளது

கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் இரணைமடுகுளம் அதன் முழுக் கொள்ளளவை அடைவது இதுவே முதன்முறை என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

தற்போது பெய்துவரும் மழைகாரணமாக மாங்குளம், கனகராயன்குளம், சேமமடுகுளம் போன்ற குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான்பாய்வதால் இரணைமடு குளத்துக்கான நீர் வரத்து தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியில் இரணைமடுகுளம் புனரமைக்கபட்ட பின்னர் இதுவரை 34 அடியாக இருந்த அதன் கொள்ளவு 36 அடியாக உயர்த்தப்பட்டது புனரமைப்பு பணிக்குப்பின்னர் தற்போதுதான் முதன்முறையாக அதிக கொள்ளவுநீர் எட்டப்பட்டுள்ளது.

இந்தமுறை நீர்மட்டம் 36 அடிக்கு உயர்ந்தால் சிறுபோக நெற்செய்கையின் பரப்பளவு 12 ஆயிரத்து 500 ஏக்கராக மாற்றப்படுமென்பதால் தற்போது விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்

இதையும் தவறாமல் படிங்க