எரிபொருள் விலையில் மீண்டும் ஏற்படவுள்ள மாற்றம்!

116shares

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் கடந்த சில தினங்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றைய தினமும் சில அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இன்று தனது அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்ற அவர் எதிர்வரும் நாள்களில் எரிபொருள் விலையைக் குறைப்பது தொடர்பாக விரைவான வேலை திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக, கனிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பெற்றோலின் விலை ஏற்கனவே 10 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க