ரணிலுக்கு ஆதரவு வழங்குவதற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு கூடடமைப்பிடம் கோரிக்கை!

  • 6 days ago
69shares

அரசியல் நெருக்கடியில் ஆதரவு வழங்குவது தொடர்பில் மகிந்த ராஐபக்சவிடம் நிபந்தனை விதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வைத்த கோரிக்கைகள் என்ன? உறுதிமொழிகள் ஏதாவது எடுக்கப்பட்டதா என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வியெழுப்பியுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ஜனநாயக முறையில் செயற்படுத்தப்பட்டிருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமாக இருந்திருக்கும். ஆனால் செயற்படுத்தப்பட்ட முறையில் தான் கேள்விக்குறி இன்றைக்கு இருக்கிறது. ஆனால் இதில் பிரதமரை நீக்குவதற்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆனால் அச் சட்டத்தின் பிரகாரம் சிங்கள முறையில் உள்ள அடிப்படையில் நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றதென இன்னொரு தரப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே அரசமைப்பை மீறி பிரதமர் நீக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

அதிலும் அரசமைப்பிற்கு முரணான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் நீதிமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால் ஏன் இதுவரை நீதிமன்றம் செல்லவில்லை எற்ற கேள்வி இருக்கின்றது. அதே நேரம் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதென்றால் அந்த ஐனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு யாரும் ஆதரவோ அல்லது ஒத்ழைப்போ வழங்கலாம்.

ஐனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். பாராளுமன்றத்தை விரைவாக கூட்ட வேண்டுமென்பது நியாயமானது. அதன் பின்னர் வாக்கெடுப்பு என்ற ஒன்று வருகின்ற போது யாருக்கு ஆதரவு என்ற கேள்வி எழுகையில் தான் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கின்றது. இன்றைக்கு மகிந்தவிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு சில நிபந்தனைகளை விதித்த கூட்டமைப்பு அற்கு மகிந்த சம்மதிக்காததால் அவரை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக கூறியிருக்கின்றது.

அவ்வாறாயின் ரணில் விக்கிரமசிங்க அல்லது அவர் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதாயின் அவரிடம் முன்வைத்த நிபந்தனைகள் என்ன. எத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. உறுதிமொழிகள் பெறப்பட்டனவா என்ற கேள்வியும் எழுகின்றது. அத்தோடு ஏன் உறுதிப்பாடுகள் பெறப்படாமல் விடப்பட்டது என்ற கேள்வியும் இருக்கின்றது.

கடந் சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வரப்பட்ட போது கிடைத்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தவில்லை. இருந்தும் தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே அந்தச் சந்தர்ப்பத்தில் மகிந்தவிற்கு நிபந்தனையை கூட்டமைப்பு விதித்தது என்றால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏன் விதிக்கவில்லை.

ஆகவே யாருக்கு ஆதரவு வழங்குவதென்றாலும் உறுதிமொழியை எடுக்க வேண்டும். முன்னர் கிடைத்த சந்தர்ப்பத்தில் விட்ட தவறை இப்ப கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்திலும் விடக் கூடாது. ஆகவே யாருக்கும் ஆதரவை வழங்குவதென்றால் உறுதிமொழியை எடுத்துக் கொண்ட பின்னர் அந்த ஆதரவை வழங்குவது சிறப்பாக இருக்கும். ஆகவே பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் ஐனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்று சொன்னால் அதன் பின்னர் ஆதரவு என்ற நிலை வருகின்ற போது எந்த அடிப்படையில் வழஙகவேண்டும் என்பதே முக்கியமானது என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
`