நான் விலகவும் இல்லை என்னை கட்சி விலக்கவும் இல்லை - எஸ்.தவராசா!

35shares

ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து நான் விலகவும் இல்லை. என்னைக் கட்சி விலக்கவும் இல்லை. என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் அக் கட்சியின் முக்கியஸ்தருமான எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்கின்ற நீங்கள் மீளவும் அக் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது. ஈழ மக்கள் ஐநயாகக் கட்சியிலிருந்து மாகாண சபைக்கு வந்திருந்தேன். அவ்வாறு அக்கட்சி உறுப்பினராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையில்; கட்சி செயற்பாடுகளில் முன்னரைப் போன்று கூடுதலாகச் செயற்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அதற்கு காரணங்களும் இருக்கின்றன.

அதற்காக நான் கட்சியிலிருந்து விலகினதாகவோ அல்லது கட்சி என்னை விலத்தியதாகவோ இல்லை. முன்னரைப் போன்று செயற்படவில்லை அவ்வளவு தான். ஆக கட்சி செயற்பாடுகளில் தொடர்ந்து செயற்பட ஆர்வம் இல்லாத நிலையிலையே அத்தகையதொரு நிலைப்பாட்டை எடுத்திருந்தேன்.

ஆனால் இன்றைக்கு கட்சியின் செயலாளர் நாயகம் மீள்குடியேற்ற இந்துகலாசார வடக்கு அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பெடுத்திருக்கும் நிலையில் வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் அமைச்சின் செயற்பாட்டை உத்வேகத்துடன் கொண்டு செல்வதற்கு என்னுடைய பங்களிப்பை அல்லது ஆலோசனை வழங்குமாறு என்னிடம் விடுத்த கோரிக்கைகைய நான் நிராகரிக்கவில்லை.

மாகாணத்தின் அபிவிருத்திக்காக நானும் என்னாலான சேவைகளைச் செய்ய வேண்டி இருக்கின்றது. அதற்கமைய என்னுடைய முடிவுகள் அமையலாம். ஆகவே ஐனாதிபதியின் தீபாவழிப் பண்டிகை நிகழ்வில் நானும் கட்சித் தலைமையும் கலந்து கொண்டிருந்ததை இணைந்துவிட்டோம் என்று செய்திகள் வந்திருக்கலாம்.

அதற்காக பிரிந்திருந்தவர்கள் மீளவும் சேர்ந்து விட்டோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. இருவருக்கும் குறித்த நிகழ்வுக்கான அழைப்பு வந்தது அதற்கமைய சென்று நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கின்றோம் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க