ஸ்ரீலங்காவின் பிரதமர் யாராகவிருந்தாலும் பொறுப்பு கூற வேண்டியது மைத்திரியே!!!

41shares

சர்வதேசம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழர் ஜனநாயக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது

ஸ்ரீலங்காவின் பிரதமர் யாராகவிருந்தாலும் தமிழர்கள் வாக்களித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக் கூற வேண்டும் என்று தமிழர் ஜனநாயக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழர் ஜனநாயக அமையம் எனும் தமிழின் குரல் அமைப்பினர் தமது அமையத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில், நேற்று பத்திரிகையாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அந்த அமையத்தின் செயலாளர் மரியனேசம் மனோகரன், அரசியல் ஸ்த்திரத்தன்மை இல்லாத சூழ்நிலையில் தமிழ்மக்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கம் என தெரிவித்தார்.

நாட்டின் பிரதமர் யாராக இருந்தாலும் பொறுப்புக் கூறவேண்டிய முக்கிய நபர், தமிழர்கள் வாக்களித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என்று தமிழர் ஜனநாயக அமையத்தின் ஊடகப் பேச்சாளாரும் சமூகத்தொடர்பாளாருமான பிலிப் முருகையா தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் ஏற்றுக் கொண்ட கட்சி என்ற வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சர்வதேசம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க