வவுனியாவில் ஹெரோயினுடன் மூவர் கைது!

9shares

வவுனியாவில் தேக்கவத்தைப் பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில் 3 பேரை ஹெரோயின் தூள் உடமையில் மறைத்து வைத்திருந்ததற்காக கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை தேக்கவத்தைப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஹெரோயின் தூள் தமது உடமையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் மூவரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 700 மில்லிக்கிராம் ஹெரோயின் தூள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 29 வயதுடைய ஆண் மதகுவைத்தகுளம், மற்றைய இருவரும் 29 வயது, 44 வயதுடைய தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்த மூவரையே கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க