பிரதமருக்கான வாக்கெடுப்பை நடத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் மைத்திரிக்கு அழுத்தம்!

83shares

ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீள கூட்டுவதற்கு சிறிலங்கா அரச தலைவரினால் உத்தரவிட்டுள்ள தினத்தில் பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடுமையான அழுத்தமொன்றை பிரயோகித்திருக்கின்றது.

நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டடப்பட்டாலும் அன்றைய தினம் வெறுமனே அரச தலைவரின் கொள்கைப் பிரகடனம் மாத்திரமே இடம்பெறும் என்று மைத்ரி – மஹிந்த அரசாங்கம் கூறிவரும் நிலையில் நவம்பர் 8 ஆம் திக தியான இன்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கையை விடுத்திருக்கின்றது.

மேற்குலக நாடுகள் பல கூடடாக இணைந்துவெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், விடுக்கப்பட்டுள்ள வர்தமானி அறிவித்தலுக்கு அமைய நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் மிக முக்கிய விடையமான நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ளவதற்கான வாக்கெடுப்பை நடத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணாது தொடர்ந்தும் இழுத்தடித்தால் சிறிலங்கா தொடர்பான நன்மதிப்பு சர்வதேச அரங்கில் பழுதடையும் என்பது மாத்திரமன்றி முதலீடுகளும் தடைப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிடட மேற்குலக நாடுகள் எச்சரித்துள்ளன.

கொழும்புக்கான ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, ரொமேனியா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும், நோர்வே, சுவஸஜர்லாந்து ஆகிய நாடுகளின் தூதவர்களும் கூட்டாக இணைந்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்த நிலையிலேயே இந்த கோரிக்கையை விடுப்பதாக இன்றைய தினம் விடுக்கப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க