நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை: அமைச்சர் வாசுதேவ!

22shares

மைத்ரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், ஐக்கிய தேசியக் கட்சியினர் நாடாளுமன்றில் தமது பெரும்பாண்மை பலத்தை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள முடியும் என்று மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தின் தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார அறிவித்திருக்கின்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானமொன்றினை முன்வைப்பதன் மூலமே தமது அரசாங்கத்தினை வெளியேற்ற முடியும் என குறிப்பிட்டுள்ள வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருவதனைப் போல இலகுவாக தமது அரசாங்கத்தை வெளியேற்ற முடியாது எனவும் அடித்துக் கூறியுள்ளார்.

சிறிலங்காவில் மைத்திரி மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கம் தோற்றுவிக்கபட்பட்டதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்களாக பலர் கட்டம் கட்டமாக பதவியேற்று வருகின்றர். இந்நிலையில் தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார இன்றைய தினம் தனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சர்வமத வழியாடுகளைத் தொடர்ந்து தனது கடமைகளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“14ஆம் திகதி நாடாளுமன்றுக்கு செல்லும் நாம் ஜனாதிபதியின் உரையோடு எமது அன்றைய தின நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடித்துக்கொள்ளவுள்ளோம். நாடாளுமன்றில் எமக்கும் எதிர்தரப்பினருக்கும் தேவையான ரீதியில் செயற்படக் கூடிய ஜனநாயகம் உள்ளது. அதற்கமைவாக சபாநாயகர் செயற்படுவார் என எதிர்ர்ப்பார்க்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு தேவையெனின் பெரும்பாண்மையினை நிரூபித்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு முடியுமாயின் அதை நிரூபித்துக்கொள்ளலாம் அதற்கு எம்மால் எந்தவித தடையும் இல்லை. அவர்கள் நாடாளுமன்றில் பெரும்பாண்மையினை நிரூபித்தார்கள் என்று அரசாங்கத்திற்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.

அரசாங்கம் என்பது நிறைவேற்று அதிகாரமுடையது. நாடாளுமன்றம் என்பது அரசியலமைப்பு ரீதியானது. அதன் காரணத்தால் இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு நம்பிக்கையில்லா பிரேரணையொன்றினைக் முன்வைத்து எமது அரசாங்கத்தினை வெளியேற்ற முடியும். அரசாங்கம் தங்கியிருப்பது பெரும்பாண்மையில் அல்ல. அரசாங்கம் என்பது நிறைவேற்று அதிகாரத்தின் ஒருபகுதியாகும்.

அரசாங்கத்தின் அதிகாரம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழேயே உள்ளது. அவ்வாறான நிலையில் அரசாங்கத்தினையும் நாடாளுமன்றினையும் இணைத்து குழப்பிக்கொள்ள வேண்டிய தேவையில்லை.

அவர்கள் தெரிவிப்பதைப் போல இலகுவாக அரசாங்கத்தினை வெளியேற்ற முடியாது. அமைச்சர்கள் செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையிருந்த காரணத்தினாலேயே நாடாளுமன்றினை உடனடியான கூட்ட முடியாது போனது. ஆனாலும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவரை கௌரவப்படுத்தும் வகையிலேயே முகமாகவே நியமித்த தினத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்றினை கூட்டுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது நாம் ஆட்சியினை கைப்பற்றிவிட்டோம். நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க