ஜனநாயகத்தை பாதுகாப்பதில் கூட்டமைப்பு உறுதி: சுமந்திரன்!

33shares

சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்து மாத்திரமன்றி அதன் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

இதனால் இந்த அரசியல் சாசன மீறல்களுக்கு எதிராக வாக்களிப்பது என்று தாம் எடுத்த முடிவில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கக்கூடாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் திடடவட்டமாக அறிவித்திருக்கின்றார்.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அகற்றி ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையுமு் நிலைநாட்டும் நோக்கில் மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்காக முன்னின்று உழைத்த புரவெசி பலய என்ற நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகர் மாதுலுவாவே சோபித்த தேரரின் மூன்றாவது நினைவு தினம் இன்றைய தினம் (11.08.2018) தலைநகர் கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள், தமிழ் தேசியக் கூடடமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், கல்விமான்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.

மாதுலுவாவே சோபித்த தேரரின் தலைமையில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் முற்றாக மாற்றப்பட்டு நாடு மீண்டும் அராஜகத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக இன்றைய நினைவேந்தல் கூடட்த்தில் கலந்துகொண்டவர்கள் கவலை வெளியிட்டனர்.

இந்த நிலையில் கொழும்பு அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக கருதப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தோடர்பில் அதன் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

இதையும் தவறாமல் படிங்க