கூட்டமைப்பின் தீர்மானம் சரியானது: சீ.வி.கே.சிவஞானம்!

27shares

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மையினக் கட்சிகளின் தீர்மானத்தை வட மாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வரவேற்றுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசியலில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் எவருக்கும் ஆதரவு வழங்காமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என்று முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டுமொரு அரசியல் விரோத செயற்பாடு இடம்பெறாவிட்டால், ஜனநாயக வழியில் மீண்டுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் வட மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆருடம் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க