பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

75shares

இரண்டு நாட்களுக்கு முன்பதாக நாடாளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளமையானது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு மதிப்பளித்தே என்று நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

”அரசாங்கத்தின் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேவையான சந்தர்ப்பத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன 7 தடவைகளும், ஆர்.பிரேமதாச நான்கு தடவைகளும், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐந்து தடவைகளும், மஹிந்த ராஜபக்ஷ ஐந்து தடவைகளும் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்கள். ஆனால் குறைந்த தடவைகள் ஒத்திவைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே”என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
`