மைத்திரிக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய சவால்!

85shares

சந்திகளிலும், ஊடகங்களிலும் எம்மிடம் 113 இருப்பதாக கூறும் ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றை கூட்டி 113 என்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சவால் விடுத்துள்ளார்.

பெரும்பான்மை இருப்பது உண்மையானால் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஏன் தயங்கவேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, 14ம் திகதி நாடாளுமன்றில் யார் குழறுபடிகளை மேற்கொள்ள நினைத்தாலும் அதற்கிடமளியாது 121 என்ற தமது பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் ரணில் தலைமையிலான ஆட்சியை கைப்பற்றுவோம் என மங்கள சமரவீர சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க