நீதிமன்றம் வழங்கிய உத்தரவால் கோட்டா மகிழ்ச்சி!

76shares

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை தளர்த்துவதாக நீதிமன்றம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி முதல் ஒரு மாத காலம் வரையில் கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கான தடையை தளர்த்துவதாக மூவரடங்கிய விசேட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தனது தந்தையான டீ.ஏ. ராஜபக்ச நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவுக்கு எதிராக காணப்படுகிறது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினமும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது அவருக்கான வெளிநாடு செல்வதற்குரிய இடைக்காலத் தடையுத்தரவை தளர்த்துவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச உட்பட 7 சந்தேக நபர்களுக்கு எதிரான இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் விரைவுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க