ஜே.வி.பி விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

180shares

அரசியலமைப்பிற்கு விரோதமான ஒரு அரசாங்கத்துக்குக் கீழ் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் அது மிகவும் ஆபத்தான ஒரு தேர்தலாகவே அமையும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய அரசியல் நெருக்கடிகளைத் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று ஜே.வி.பி சார்பாக அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருமான்மையை நிரூபிப்பதற்கு முன்னர் இந்த அரசியலமைப்பிற்கு எதிரான ஆட்சி முறையினை மாற்றியமைக்கப்படவேண்டும் என குறினார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபித்ததன் பின்னரே தேர்தலுக்கு போகவெண்டும். இல்லையேல் ஆபத்தான ஒன்றாகவே தேர்தல் அமையும்.

அவ்வாறு எந்தவித முறைமையும் இல்லாமல் தேர்தலுக்கு போனால் இதனை ஒரு அரசியல் சதி என்றே கொள்ளமுடியும் என்றும் ரில்வின் சில்வா மேலும் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க