விசேட செய்தி: சற்றுமுன்னர் அவசரமாக சந்தித்த மஹிந்த-மைத்திரி! அடுத்த கட்டம் என்ன?

384shares

சிறிலங்காவின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் சற்றுமுன்னர் அவசரமாக சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தகவல் கிடைத்துளது.

இந்த சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் நாள் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் குறித்த நாளன்று நாடாளுமன்றம் சாதாரண அமர்வு போலவே ஆரம்பமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் குறித்த நாளன்றே பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என ஐக்கியதேசியக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

இந்த நிலையிலெயே மைத்திரி மற்றும் மஹிந்த ஆகியோரது இன்றைய சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட இருவரும் எம்மாதிரியான முடிவுகளை எடுத்துள்ளனர் என்பதுதொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவிலை.

இதையும் தவறாமல் படிங்க