இலங்கை-சிங்கப்பூர் உடன்படிக்கை ரத்து?

127shares

புதிய அரசாங்கத்தின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள பந்துல குணவர்தனவுக்கு, இலங்கை -சிங்கப்பூர் உடன்படிக்கையை இரத்து செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தான் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டால் , முதல் விடயமாக , இலங்கை சிங்கப்பூர் உடன்படிக்கையை இரத்து செய்வதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார். அவர் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டு சில நாட்கள் கடந்துள்ளன. எனினும், அதற்கான நடவடிக்கையை ஏன் இதுவரை எடுக்கவில்லை என ஹர்ஷ டி சில்வா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க