”இலங்கை சிங்கள பௌத்த நாடு இல்லை; அப்படிச் சொல்பவர் என் எதிரி” மனோ கடும் சீற்றம்!

92shares

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற கருத்தை முற்றாக நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையை ஒரு இனத்துக்கும் மதத்துக்கும் சொந்தம் எனக் கூறுபவர்கள் எவரும் தனது எதிரி என்று அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் தனது முக நூலில் பகிர்ந்த பதிவு ஒன்றிலேயே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இது பல்லின, பன்மொழி, பன்மத நாடு. இங்கே 3 மொழிகள், 4 மதங்கள், 19 இனக் குழுக்கள் வாழ்கின்றன. இதை நான் அமைச்சராக இருக்கும் போதே ஆயிரம் முறை கூறியுள்ளேன். இன்றும் கூறுகிறேன். ஆகவே இந்த நாடு "சிங்கள பெளத்த நாடு" என்ற கருத்தை நான் நிராகரிக்கிறேன். இந்நாடு ஒரு இன மதத்திற்கு மாத்திரம் சொந்தமானது என கூறும் எவரும் என் எதிரி. என் இந்த நிலைப்பாட்டை இலங்கையை தாய்நாடாக கருதும் ஒவ்வொருவரும் ஆதரிக்க கோருகிறேன்." என்றார் அவர்.

இதையும் தவறாமல் படிங்க