நாடாளுமன்றம் கலைப்பு; உச்சக்கட்ட பாதுகாப்பில் கொழும்பு!

186shares

சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்குரிய நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தி நாட்டின் நாடாளுமன்றத்தை சற்று முன்னர் கலைத்தார்.

இது தொடர்பான வர்த்தமானி சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதுடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களதும் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பிலும், நாடு முழுவதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பின் முக்கிய பகுதிகளில் இரானுவத்தினர் குவிக்கப்பட்டு வருவதாகவும், கலவரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

இதையும் தவறாமல் படிங்க