தற்போது கிடைத்த செய்தி: அலரி மாளிகையிலிருந்து வெளியேற்றப்படும் ரணில்?

1098shares

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ள நிலையில் அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த தேர்தல் நடந்து முறையான அரசாங்கம் ஒன்று அமையும்வரை இதே அமைச்சரவையுடன் காபந்து அரசாங்கம் தொடரும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை காபந்து அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ இருக்கவுள்ள நிலையில் இரவோடு இரவாக அலரி மாலிகையிலிருந்து ரணில் உள்ளிட்ட ஐக்கியதேசியக் கட்சியினரை வெளியேற்றும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக தற்போது கிடைத்த செய்தி ஒன்று கூறுகின்றது.

எவ்வாறாயினும் சிறிலங்கா அரச தலைவர் எடுத்த இந்த திடீர் முடிவு சர்வதேச மட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க