அதிவிசேட அறிவித்தல்: 2019 ஜனவரி 5 ஆம் திகதி பொதுத் தேர்தல்!

271shares

சிறிலங்கா நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவுடன் கலைத்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, புதியநாடாளுமன்றத்தை 2019 ஆம் ஆ்டு ஜனவரி 17 ஆம் திகதி கூட்டுவதற்கும்உத்தரவிட்டிருக்கின்றார்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்காவின்உள்ளூர் நேரப்படி நவம்பர் 9 ஆம் திகதி இரவு 11.45 அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசேடவர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று பொதுத் தேர்தலுக்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நவம்பர் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிநண்பகல் 12.00 மணி வரை வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெறும்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை நாடாளுமன்றத்தை கலைத்ததன் பின்னர் காபந்துஅரசாங்கமொன்றை கொண்டநடத்துவதற்குத் தேவையான அமைச்சரவையை இன்றைய தினம் நியமித்துமுடிந்த்துவிட்டதாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை விகிதாசார தேர்தல் முறைமைக்கு அமையவே 2019 ஜனவரிஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நடத்தப்படு்ம் என்றும் சிறிலங்கா அரசதலைவர் மைத்ரிபால சிறிசேன அறிவித்திருக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க