மகிந்த அரசு ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே செய்த நாச வேலை! கொந்தளிக்கும் மாணவர்கள்!

272shares

நாட்டில் தற்போது அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நியைில் மகிந்த அரசினால்ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே எரிபொருட்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டது. பல அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் தொலை தொடர்பு வரிகள் என்பன குறைக்கப்பட்டன.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டாலரின் விலை அதிகரிப்பால் இறக்கு மதி விலைகள் அதிகரித்திருந்த நிலையில் மஹிந்த அரசால் மட்டும் எப்படி எரிபொருள் விலையை குறைக்க முடிந்தது என்பது கேள்விக்குறியாக இருந்தது.

ஆனால் எரிபொருள் விலையை குறைத்து மக்களின் மனங்களை வெல்ல மஹிந்த அரசு செய்த வேலையால் மறுபுறத்தில் இலங்கை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நல்ல ஒரு திட்டம் கைவிடப்பட உள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு நல்லாட்சியின் தேசிய அரசாங்கத்தில் வழங்க இருந்த இலசவ மடிக்கணனி திட்டத்தினை இரத்து செய்தே மஹிந்த அரசு எரிபொருள் விலையை குறைத்துள்ளது.

இதன் மூலம் பாடசாலை மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவை மெருகூட்ட கிடைத்த நல்ல சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது.

மஹிந்த அரசு நடத்திய நாடகத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியுள்ளார்.

மஹிந்த மைத்திரியின் இடைப்பட்ட ஆட்சியில் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டாம் எனவும் சம்பிக்க இது தொடர்பில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
`