விசேட செய்தி: பரபரப்பாகும் கொழும்பு; மைத்திரிக்கு எதிராக நான்கு முனைகளில் போர்!

630shares

சிறிலங்கா ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றைக் கலைத்தார் என்றும் அதனை உடனடியாக ரத்துச் செய்யவேண்டும் என்று கோரியும் இலங்கையில் முன்று கட்சிகள் இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தை நாடுகின்றன.

அதன்படி ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே இவ்வாறு உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அறிவித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி ஒன்றை வெளியிட்டார். அன்றைய நாள் முக்கியமான சில திணைக்களங்களை தனக்குக் கீழே கொண்டுவந்த ஜனாதிபதி திடீரென நாடாளுமன்றைக் கலைத்தார்.

இந்த செயற்பாடு உள் நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் கடும் தாக்கத்தினைச் செலுத்தியிருந்தது. நாடாளுமன்றத்தில் அங்கம்வகித்த பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தமது கண்டனங்களை வெளியிட்டதுடன் உயர் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் குறியிருந்தன.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் இது தொடர்பான வழக்குத் தாக்கல் ஒன்று உயர் நீதிமன்றத்தில் மேற்படி கட்சிகளால் முன்வைக்கபடவுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
`