சற்றுமுன் கிடைத்த செய்தி: நாளை வரவுள்ளது வரலாற்றுத் தீர்ப்பு?

2457shares

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சை தொடர்பில் பதிலிறுக்க சட்ட மா அதிபர் கால அவகாசம் கோரியதால் உயர்நீதிமன்ற விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இன்று தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்றைய தினமே பரிசீலனைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் முற்பகல் முடிவு செய்திருந்தது..

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயரத்ன ஆகிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.30 வரை மனுக்கள் ஆராயப்பட்டன.

நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்த பின்னர் இந்த மனுக்கள் தொடர்பில் பதிலிறுக்க தனக்கு மேலும் கால அவகாசம் தேவையென மனுக்களில் பிரதிவாதிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள சட்ட மா அதிபர் தெரிவித்ததையடுத்து மனுக்கள் மீதான விசாரணைகளை நாளையும் தொடர தீர்மானித்து இன்றைய அமர்வை மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் ஒத்திவைத்தது.

நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டு சிறிலங்காஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9 ஆம் திகதி இரவு விசெடவர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

சிறிலங்கா அரச தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று குற்றம்சாட்டி கடும் எதிர்ப்பை வெளியிட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்தன.

இன்று காலை முதல் இந்த மனுக்கள் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், இன்று முற்பகல் பத்து மணிக்கு இவற்றை ஆராய்ந்த தலைமை நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றைய தினம் பிற்பகல் 2.00 மணி வரை உத்திவைத்தது.

இதற்கமைய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பிற்பகல் இரண்டு மணிக்கும் முன்னர் அறிவித்திருந்ததற்கு அமைய, அரசியல் கட்சிகள், அரசியல்கட்சிகளின் முக்கியஸ்தர்கள், சட்டத்தரணிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ராஜன் ஹுல் ஆகியோர் தாக்கல்செய்திருந்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த குழாமில் உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்தஜயவர்தன, பிரசன்ன ஜயரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கமைய சுமார்ஐந்து மணி நேர விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில், அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் பிரதிவாதிகளில் ஒருவராககுறிப்பிடப்பட்டுள்ள சட்டமா அதிபர், மனுக்களுக்கான பதில்களை வழங்குவதற்குதனக்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை கருத்தில்கொண்ட மூவர் அடங்கிய உச்ச நீதிமன்றநீதியரசர்கள் குழாம் நாளை முற்பகல் 10.00 மணி வரை மனுக்கள் மீதான விசாரணைகளை ஒத்திவைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டு சிறிலங்காஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9.00 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்திற்குமுரணானது என்று குற்றம்சாட்டிவந்த ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பீ, தமிழ்முற்போக்கு முன்னணி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், அரசியல்கட்சிகளின் முக்கியஸ்தர்களும், சட்டத்தரணிகளும், மாற்றுக் கொள்கைக்கான கேந்திர நிலையம் என்பன தனித்தனியே 13மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றன.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, அவரால் நியமிக்கப்பட்ட காபந்து அரசாங்கத்தின் பிரதமர் மஹிந்தராஜபக்ச மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க