அனைவரது பாராட்டையும் பெற்ற யாழ் பாடசாலை மாணவர்களின் செயல்!

68shares

போதைப் பொருளுக்கு எதிரா யாழில் இன்று நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோண்டாவில் பரஞ்சோதி பாடசாலை மாணவர்களாலேயே இந்த போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி இன்று முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் பாடசாலை மாணவர்களும் இணைந்து இந்த நடைபவனியை மேற்கொண்டிருந்தனர்.

நடைபவனி கோண்டாவில் வீரபத்திரர் ஆலய வீதி ஊடாக சென்று வாகீஸ்வரி வீதி, தில்லையம்பதி ஆலய வீதி வரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

இந்த நடைபவனியில் கலந்து கொண்ட மாணவர்கள் “நீ குடிக்கும் மது உன்னைக் கொல்லும்”, குடி குடியை கெடுக்கும்”,புகைத்தல் புற்று நோயை உண்டாக்கும்”,”பஞ்சமா பாதங்களில் முதன்மையானது போதை”,போதை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இதையும் தவறாமல் படிங்க