பெரும் பரபரப்பையடுத்து சபாநாயகர் எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு; அதிர்ச்சியில் மஹிந்த வாதிகள்!

704shares

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை மீண்டும் நாளை கூட்டவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய நாடாளுமன்றம் நாளை 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.

நாடாளுன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியையடுத்த சபாநாயகர் ஆசனத்தில் இருந்து எவ்வித அறிவித்தலும் விடுக்காது சபாநாயகர் கரு ஜயசூரிய எழுந்து சென்றிருந்தார்.

இதனையடுத்து நாடாளுமன்ற அமர்வானது எதிர்வரும் 21 ஆம் திகதி ஒத்தி பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுன் நாளைய தினம் நாடாளுமன்றத்தை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க