மஹிந்த தலைமையிலான அரசாங்கம் தொடரும் எஸ்.பி. அதிரடி!

26shares

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கம் து தனது பணிகளை முன்னெடுக்கும் என்று பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர்எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனை ஸ்ரீ அபிநாவாராம விகாரையில் இடம்பெற்றவிசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் கினிகத்தேனை விகாரை மண்டபத்தில் இடம்பெற்றமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மைத்திரி - மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கம் எந்தவிதபிரச்சனைகளும் இன்றி தொடர்ந்தும் செயல்படும் எனவும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைதொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின் தீர்ப்புக்கு அமைவாகஎதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எஸ்.பி. திஸாநாயக்கசுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றால் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெற்றுபெரும்பான்மையுடன் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர்கூறியுள்ளார்.

எனினும் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதிகிடைக்காவிட்டால் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டதற்போதைய நாடாளுமன்றம் 2020ஆம் ஆண்டு வரையில் தனது பணிகளை முன்னெடுக்கும் என அவர் உறுதியாகதெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
`