என்ன நடக்கிறது மட்டக்களப்பில்? சுற்றிவளைக்கப்படும் தமிழர்கள் அச்சத்தில் வாழும் நிலை!

  • Sethu
  • December 04, 2018
217shares

மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச் சாவடி மீனாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அஜந்தனின் வீட்டில் பொலீசார் இன்று தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச் சாவடியில் இருந்த இரு பொலீசார் மீது தாக்குதல் நடாத்தி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அஜந்தன் அவர்கள் கடந்த ஐந்து நாட்களாக தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று (4) காலை அவரது வீட்டிற்கு சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலீசார் மோப்பநாய்களை கொண்டு தேடுதல் நடாத்தியுள்ளனர்.

அத்துடன் அவரது காணியில் உள்ள கிணற்றில் உள்ள தண்ணீர் இரைக்கப்பட்டு ஆயுதங்கள் தேடப்பட்டுள்ளன.

வவுணதீவு ஆயுதங்களை களுவன்கேணியில் தேடிய பொலீசார்!

மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச் சாவடி மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பொலீசார் இன்று களுவன்கேணி பிரதேசத்தில் தேடியுள்ளனர்.

இன்று களுவன்கேணி பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினரால் தேடுதல் வேட்டை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது வவுணதீவு பொலிசாரின் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பொலீசாரிடம் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக கூறி காணி ஒன்றில் தேடுதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பல இடங்களில் சுற்றிவளைத்து தேடுதல்!

மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச் சாவடி மீதான தாக்குதலுக்கு பின்னர் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் வவுணதீவு, கன்னங்குடா காஞ்சிரம்குடா, மயிலவெட்டுவான், களுவன்கேணி, வாகரை கட்டுமுரிவு என பல பிரதேசங்களிலும் பரவலாக சுற்றிவளைப்பு தேடுதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சில இடங்களில் பாதுகாப்பு தரப்பினர் வீடு வீடாக சென்று தேடுதல் நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க