ஈழத்தவர்களுடன் சுவிற்சலாந்தில் தென்னிந்திய பாடகர்; புலம்பெயர் தமிழர்களே நீங்கள் தயாரா?!

556shares

ஐ.பி.சி தமிழ் பெருமையுடன் நடாத்தும் ஈழத்தை சேர்ந்த புலம்பெயர் தமிழர்களை சாதனையாளர்களாக மாற்றும் மாபெரும் கலை நிகழ்வான 'ஐபிசி தமிழா' சுவிற்சலாந்து 2018' விரைவில் இடம்பெறவுள்ளது.

இதில் தாயகத்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் நடுவர்கள் பலரும் வந்து கலந்து கொள்ளவுள்ளனர்.

குறிப்பாக அன்று நடைபெறவுள்ள மாபெரும் இரண்டு போட்டிகளுக்கான இறுதிச்சுற்றுக்களில் ஒன்றான 'தங்கத் தமிழ்க் குரல் இளையோர்' இன் வெற்றியாளர்களைத் தெரிவு செய்வதற்காக கேரள மண்ணின் இசை மைந்தன் 'வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு' பாடல் புகழ் பாலக்காடு ஸ்ரீராம் நேற்று சுவிஸிற்கு வருகை தந்துள்ளார்.

மற்றைய சுற்றுக்களிலும் நடுவர்களில் ஒருவராக இருந்து இறுதிச்சுற்றுக்கான போட்டியாளர்கள் ஐவரைத் தெரிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் நிச்சயமாக இந்த குறிப்பிட்ட போட்டி மிக திறமையானவர்களை கொண்டிருப்பதால் வெற்றியாளரை தெரிவு செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க