முன்னாள் போராளி தற்கொலை!

173shares

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரொருவர் நேற்று அவரது வீட்டில்த் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த 45 வயதுடைய திசவீரசிங்கம் என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே எனத் தெரியவந்துள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

தற்கொலை செய்து கொண்ட நபர் இதற்கு முன்னரும் தற்கொலைக்கு முற்சித்துள்ள நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. யுத்த காலத்தில் இவரின் உடலில் புகுந்த வெடிபொருட்கள் சில அகற்றப்படாததால் , இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதாகவும் அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க