ஐக்கிய தேசிய முன்னணியின் அடுத்த அதிரடி நடவடிக்கை!

67shares

பிரதமர் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் சில பங்காளிக் கட்சிகளுடன் மைத்திரி-மஹிந்த தரப்பினர் இரகசிய வாக்கெடுப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவலொன்று பரப்பப்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டிலும், நாடாளுமன்றத்திலும் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் சில அமைச்சுக்களின் செயலாளர்கள் சட்டவிரோதமாக செயற்படுவதாகவும். அவர்கள் குறித்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க