ஜனநாயகவாதி அல்ல கள்ளப் பாதுகாவலன்! விரட்டியடிக்க வேண்டும்!

104shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தின் கள்ளப் பாதுகாவலன் என மக்கள் விடுதலை முன்னணி பகிரங்கமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

சட்டத்திற்குப் புறம்பாக அரசியலமைப்பினை மீறி மைத்திரி, மஹிந்தவிற்கு பிரதமர் பதவியினை வழங்கிய போது யாரேனும் அதற்கு ஆதரவு தெரிவித்திருப்பார்களாயின், அது ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் மீதிருந்த வெறுப்பினாலேயாகும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி சூளுரைத்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ஜே.விபியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஒக்டோம்பர் மாதம் 23 ஆம் திகதி நடைமுறையிலிருந்த அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினரான நாம் சிறிலங்காவின் வரலாற்றில் மிகப்பெரிய அரசு எதிர்ப்பு போராட்டமொன்றினை கொழும்பில் மேற்கொண்டோம். அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை உருவாக்கியது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியாகும்.

இந்த அரசாங்கம் மக்களுக்கு வரிகளை விதித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையினை அதிகரித்தது, பெற்றோல் விலை சூத்திரங்களை அமுல்படுத்தியது, மாதாந்தம் எரிபொருள்களின் விலையினை அதிகரித்தது, பொருளாதாரத்தை சீரழித்தது, நாட்டுக்கு எதிரான சிங்கப்பூர் வர்தக உடன்படிக்கை மற்றும் எட்கா உடன்படிக்கையினை கொண்டு வந்திருந்தது. அதேபோல கல்வியை விற்க முயற்சித்ததோடு, இளைஞர்களின் வேலையின்மைக்கு பதிலளிக்காது நழுவிச் சென்றது. அதன் காரணத்தால் இந்த அரசாங்கத்தினை விரட்டியடிக்க வேண்டும் என்ற தேவையெமக்கு இருந்தது.

முறையாக ஒழுங்குப்படுத்திய ஒரு மக்கள் தொகையினரை இந்த ஆர்பாட்டத்திற்கு அழைத்து வந்திருந்தோம். அத்தோடு நின்றுவிடாது கொண்டுவரப்படவிருந்த வரவு செலவு திட்டம் வரையில், அதைத் தொடர்ந்து மக்கள் ஆட்சியினை நிலைநாட்டுவதற்கான ஆர்பாட்டத்தினை நாம் தோற்றுவித்தோம். ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறு மக்களுக்கு அவதூறான விடங்களினை மேற்கொண்டதைத் தொடர்ந்து மக்களுக்கு அரசாங்கம் மீதான எதிர்ப்பு இருந்த காரணத்தினால் அமைதியாக இருந்தனர். அதுவே உண்மையாகும்.

இந்த அரசாங்கத்திற்கு நல்ல பாடமொன்றினை புகட்டுவதற்கும் மக்களுக்கு தேவையாக இருந்தது. இவ்வாறான நிலையில் மைத்திரி - மஹிந்த அரசாங்கத்திற்கு ஏதேனுமொரு வழியில் ஆதரவு வழங்கியிருப்பார்களெனின், அது ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் மீதிருந்த எதிர்ப்பின் காரணமாகவேயாகும். அப்படியாயின் இந்த அரசியல் சூழ்ச்சிக்கு ரணில் விக்ரமசிங்கவும் அவரது அரசாங்கமும் ஒரு வகையில் பங்காளர்களாவர் எனத் தெரிவிதார்.

அதேவேளை ரணில் மைத்திரி ஆகிய இருவருமே ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் தண்டனைக்குட்படுதப்படும் போது அவற்றுக்குள் நுழைந்து தடுப்புக்களை இட்டதாக ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

அங்கு அனுர குமார திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் இந்த ஜனநாயகத்தின் பாதுகாவலன் ரணில் விக்ரமசிங்க அல்ல. உண்மையிலும் ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தின் பாதுகாவலனா? ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ஜனநாகயத்தின் கள்ளப் பாதுகாவலன் அவர்.

என்ன ஜனநாயகம்? ரணில் விக்ரமசிங்க என்ன செய்தார் இந்த நாட்டுக்கு? கடந்த மூன்றரை வருடங்களாக நாட்டின் பொருளாதாரத்தினை வீணாக்கினார். அவரை விரட்டியடிக்க வேண்டும். அது தொடர்பில் எந்த விவாதமும் எமக்கு இல்லை. நாட்டுக்கு பொருத்தமற்ற உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டார். அவற்றை தோற்கடிக்க வேண்டும். அது தொடர்பில் எந்த எதிர்ப்புக்களும் இல்லை.

அதேபோல ஊழல்களுக்கு தண்டனை வழங்குவதனை தடுத்தார். ரணில் மட்டுமல்ல மைத்திரியும் அவ்வாறு தடுத்தார். குற்றவாளிகளை கைது செய்ய முயற்சிக்கையில் அவற்றை ரணில் மட்டுமல்லாது மைத்திரியும் தடுத்தனர் என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க