இலங்கையில் இன்று வரலாற்றையே அதிர்ச்சியடையவைத்த சம்பவம்!

393shares

இன்றைய தினம் பேருவளையில் 2778 மில்லியன் ரூபா பெறுமதியான 231கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இதன்படி நடப்பாண்டில் சுமார் 5166 மில்லியன் ரூபா பெறுமதியுடைய சுமார் 430 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம் ஹெரோயின் போதைப் பொருள் சம்பந்தமாக நாடு முழுவதும் 37,304 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை சிறிலங்காவில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருள் சந்தேக நபர்கள் நாளாந்தம் கைதுசெய்யப்படுகின்றமை தற்காலத்தில் அதிகரித்துள்ளதாக பிறிதொரு தகவல் கூறுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க