மைத்திரியின் கடும் போக்கை உலகறியச் செய்த ஐ.தே.க!

55shares

ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளை இன்று சந்தித்து நாட்டு நிலைமை குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.

இச் சந்திப்பின் போது ஜனாதிபதியின் கடும் நிலைப்பாடு குறித்தும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கு எடுத்துரைத்துள்ளனர்.

மேலும் 117 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ளதையும் ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள போதிலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவியை பறித்துள்ளார் என ஐக்கியதேசிய கட்சித் தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க