கா.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு குதிரை ஓடியவருக்கு ஏற்பட்ட கதி!

198shares

கா.பொ.த சாதாரணதர பரீட்சை கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் சாதாரண தர பரீட்சையில் பரீட்சார்த்திக்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றியிருந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்தை சேர்ந்த பரீட்சை மத்திய நிலையத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பின்னர் , குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் பரீட்சைக்காக இவ்வாறு மோசடியான முறையில் தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
`