பணிபுறக்கணிப்பின் மத்தியிலும் இடம்பெறும் காட்டிக்கொடுக்கும் செயல்!

24shares

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களால் பறிக்கபட்ட தேயிலை கொழுந்தினை தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல இ.தொ.கா. ஆதரவாளர்கள் தடைவிதித்துள்ளனர்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 03 வது நாளாகவும் இடம் பெற்று கொண்டு இருக்கின்ற பணிபுறக்கணிப்பு ஒரு புறம் இடம் பெற்று கொண்டு இருக்கின்ற தருனத்தில் இன்று வியாழகிழமை காலையில் இருந்து நோர்வூட் வெஞ்சர் அப்பலோரன்ஸ் மேற்பிரிவு தோட்ட தொழிலாளர் பனிபுறக்கணிப்பை தவிர்த்து தேயிலை கொழுந்து பறித்த சம்பவம் ஒன்று வெஞ்சர் தோட்டபகுதியில் இடம் பெற்றள்ளது.

தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதற்காக தங்களது தேயிலை கொழுந்தினை அளவீடு செய்து கொள்ள வந்த 56தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதராவளர்களை இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்கள் தடைவிதித்தனர்.

மலையகம் எங்கும் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றவேளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் இன்றய தினம் தேயிலை மலைகளுக்கு சென்று தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவே இது ஒரு காட்டி கொடுப்பு செயல் என்பதாலே இவர்களால் பறிக்கபட்டு வந்த தேயிலை கொழுந்தினை தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல தடைவிதித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தோட்டமுகாமையாளர் மற்றும் நோர்வூட் பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவளைக்கபட்டதன் பின்னர் எக்காரணத்தை கொண்டு எங்களின் பணிபுறக்கணிப்பு போராட்டம் தொடரும் வரை எந்த தொழிசங்கத்தை சார்ந்தவர்களுக்கு தேயிலை கொழுந்து பறிப்பதற்க்கு தோட்டநிர்வாகம் அனுமதி வழங்க கூடாது என இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்த போது இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மையும் ஏற்பட்டது.

எனவே நாளைய தினத்தில் இருந்து குறித்த தோட்டப்பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்க ஆதரவாளர்களும் ஒற்றுமையாக இணைந்து பனிபுறக்கணிப்பில் ஈடுபட போவதாக கூறி எடுக்கபட்ட தீர்மானத்தின் பின்னர் வீதியின் ஓரமாக கொட்டபட்டு கிடந்த தேயிலை கொழுந்தினை நோர்வூட் பொலிஸாரின் பாதுகாப்பு உதவியோடு தொழிற்சாலைக்கு கொண்டு செல்லபட்டமை குறிப்பிடதக்கது.

இதையும் தவறாமல் படிங்க