பூதாகரமாகும் தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினை! 1440 கிலோ தேயிலை கொழுந்தில் மண்ணெண்ணை ஊற்றிய நபர்கள்!

27shares

1440 கிலோ தேயிலை கொழுந்தில் மண்ணெண்ணையை ஊற்றியவர்கள் மீது ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி மலையகத்தில் முன்னெடுக்கபட்டு வருகின்ற பணிபுறக்கணிப்பு ஆர்பாட்டமானது மலையகம் முழுவதும் இடம் பெற்று வருகின்ற நிலையில் சில தோட்டபகுதிகள் உள்ள தோட்ட தொழிலாளர்கள் இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பை கைவிட்டு சில தொழிலாளர்கள் இன்ற தினம் தொழிலுக்கு திரும்பியுள்ளனர்.

இந் நிலையில் ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் செனன் தோட்டபகுதியில் இன்றய தினம் தொழிலுக்கு சென்று தேயிலை கொழுந்தினை பறித்து இருந்தமையும் குறிப்பிடதக்கது.

அந்தவகையில் செனன் தோட்ட தொழிலாளர்களால் பறிக்கபட்ட 1440கிலோ கொழுந்தினை மலை ஒன்றினுல் இருந்து ஹட்டன் செனன் தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு டெக்டரி ஒன்றில் ஏற்றிவரும் போது தொழிற்சாலைக்கு செல்லும் வீதியில் இனந் தெரியதாவர்களால் குறித்த டெக்டரியை வழிமறித்து தேயிலை கொழுந்தில் மன்னையை ஊற்றியுள்ளதாக குறித்த டெக்டரியின் வாகனசாரதி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று மாலை 03.30மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பதிவு செய்யபட்ட முறைபாட்டில் இருந்து தெரியவந்துள்ளது குறித்த முறைபாட்டுக்கு அமைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதையும் தவறாமல் படிங்க