யாழில் முன்னாள் போராளிகளுக்கு கிடைத்த நன்மை!

102shares

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் ஒரு தொகுதியினருக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் புனர்வாழ்வு அதிகாரசபையினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அதிகாரசபையின் யாழ் மாவட்ட இணைப்பாளர் கேணல் வஜிர மடுகல்ல தலைமையில் யாழ் அரியாலை சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.

புனர்வாழ்வு அதிகாரசபையினால் கடந்த காலங்களில் புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 16 குடும்பங்களிற்கு பசு மாடுகள் மற்றும் 42 குடும்பங்களுட்டு ஆடுகளும் இவ்வாறு வழங்கப்பட்டன.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் புனர்வாழ்வு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஹேமன் பெர்னாண்டோ யாழ் மேலதிக அரச அதிபர் சுதர்சன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இந்த உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர்.

இதையும் தவறாமல் படிங்க