இலங்கையில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளன!

  • Sethu
  • December 06, 2018
20shares

தற்போது பெய்துவரும் மழையினால் மகாவலி அதிகார சபையினால் நிர்வகிக்கப்படும் பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 80 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் தினைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 99.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 95.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 92 சதவீதமாகவும் உடவளவை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 96.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க