வேட்டைக்குச் சென்ற நபருக்கு நடுக்காட்டில் நடந்த பயங்கரம்!

228shares

மத்திய மாகாணம் கண்டியிலுள்ள உடத்தவ, கலேயாய பகுதியில் மின்சாரத் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கண்டியில் ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த ஹசலக பொலிஸார், 20 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர்.

குறித்த நபர் மேலும் நால்வருடன் வேட்டைக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

தோட்டம் ஒன்றைச் சுற்றி மின்சார வேலி பொருத்தபட்டிருந்ததாகவும் அதிலிருந்த மின்சாரம் தாக்கியதனாலேயே குறித்த நபர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்