தற்கொலையுண்ட முன்னாள் போராளியின் பிள்ளைகளுக்கு உதவிடுவீர்!

203shares

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியை அண்டி வசித்து வந்த 45 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து திசவீரசிங்கம் என்பவரே நேற்று முந்தினம் புதன்கிழமை (05) அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம்பற்றி களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர் ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்த காலத்தில் தாக்குதல் சம்பவங்களின்போது இவரது சரீரத்தில் உள்நுழைந்த ஆயுதப் பொருட்களின் துகள்கள் தொடர்ந்து அகற்றப்படாமல் இருந்ததால் இவர் அடிக்கடி வலிப்பு உபாதைக்கு உள்ளாகி வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவரின் நல்லடக்கம் வெள்ளிக்கிழமை (07) காலை தேற்றாத்தீவு பொது மயானத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை குறித்த முன்னாள் போராளியின் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு யாராவது உதவி புரிந்தால் அது பெரும் வாய்ப்பாக அமையும் என அவரின் உறவினரான புண்ணியன் தெரிவித்தார்.

மனைவியின் தொடர்பு இலக்கம் 075 521 3209

இதையும் தவறாமல் படிங்க