நெருங்கியது ஆபத்து? கடுமையாக சுட்டிக்காட்டி எச்சரித்தது அமெரிக்கா!

458shares

இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் மாற்றம் இலங்கையின் பொருளாதாரத்தில் நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெயினா டெப்லிட்ஸ் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவு ஆபத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே தூதுவர் டெப்லிட்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நாம் கொண்டிருக்கும் உறவுகளின் தரம் அண்மைக் காலமாக சிறப்பாக இருந்துள்ளது. ஆயினும் தற்போதைய நிலையில் அரசியல் சூழலைக் குறிப்பிட வேண்டியுள்ளது. வளர்ச்சியடைந்துவரும் இந்த உறவுகள் உண்மையில் ஆபத்தில் இருப்பதாக எண்ணுவதுடன், எதிர்கால செயற்பாடுகள் குறித்து நோக்வேண்டியிருப்பதுடன் இது தொடரவேண்டும் என்பது என்ற கவலையும் உள்ளது.

நான் இங்கு வருகைதந்ததிலிருந்து அரசியல் நெருக்கடி எனது பெரும்பாலான கவனத்தைப் பெற்றுள்ளதுடன் இந்த நெருக்கடியானது இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களுக்கு மாத்திரம் அச்சுறுத்தலாக அன்றி இலங்கையின் பொருளாதாரத்துக்கும் அதனுடன் இணைந்த அடைவுகளுக்கும் கடந்த பல வருடங்களாக அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அதேநேரம் சில பொருளாதார சுட்டிகள் ஏற்கனவே கீழ்நோக்கிச் செல்ல ஆரம்பித்திருப்பதுடன் ஒக்டோபர் மாதத்து சுட்டிகளுடன் ஒப்பிடும்போது அரசியல் நெருக்கடி அவற்றை மோசமான நிலைக்கு இட்டுச் சென்றிருப்பதாகக் கருதுகின்றேன்.

நிலைமைகளை மோசமாக்கியிருப்பது மாத்திரமன்றி ஏனையவர்களையும் புதிய வருடத்திலும் நெருக்கடி நிலைக்குத் தள்ளிச் சென்றுள்ளது. குறிப்பாக அரசியல் சூழலில் உள்ள எமது சகபாடிகள் அதனை தற்பொழுது சிந்திக்கின்றனர் இல்லை.

மேலும் பொருளாதார வளர்ச்சி எதிர்வு கூறல் மிகவும் குறைவாக உள்ளது. மத்திய வங்கியின் தலையீடு இருக்கின்ற போதும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிகண்டு வருகிறது. சுற்றுலாத்துறையில் 12 முதல் 30 வீதம் வரையிலான முற்பதிவுகள் இரத்தாகியுள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட அபிவிருத்திப் பங்காளர்கள் தமது திட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். 2019ஆம் ஆண்டில் 5.6 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தவேண்டிய சிறிலங்காவின் நிதி இயலுமை சவாலுக்கு உட்பட்டிருப்பதாக நான் நினைக்கின்றேன். அரசியல் நெருக்கடி உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் இந்த பணியும் மேலும் சவால் மிக்கதாகவே இருக்கப் போகிறது எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க