ரவி கருணாநாயக்க, தொண்டமான் இரகசிய பேச்சு!

62shares

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க ,இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானை நேற்று அவரது தலைமையகத்தில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலையில் புதிய அரசியல் நகர்வொன்றை எடுக்கும் திட்டத்தை ரவி கருணாநாயக்க முன்வைத்ததாகவும் , ஆறுமுகம் தொண்டமான் அதற்கு ஆதரவை வழங்க இணங்கியிருப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க