தனியாக வசித்த பெண்ணொருவர் கழுத்து வெட்டிக் கொலை!

36shares

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவித்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை பொலிஸாருக்கு இன்று காலை 08.00 மணியளவில் கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்டவர் பிலியந்தலை, வத்தப்பார, மாவித்தர பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வீட்டில் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றாலும், கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பெலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
`