மூன்று நாட்களாக உணவருந்தவில்லை பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கேட்ட சிறுவர்கள்!

  • Sethu
  • December 07, 2018
116shares

மூன்று நாட்களாக உணவருந்தவில்லை என தெரிவித்து உதவி கோரி பொத்துவில் காவல்நிலையத்திற்கு மூன்று குழந்தைகள் வந்துள்ள சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொத்துவில் பகுதியில் பசி தாங்க முடியாத சிறுவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கோரிய சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்றுப் பிற்பகல் இரண்டு சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவர் இரண்டு நாட்களாக உணவு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து பொலிஸாரிடம் உணவு கோரியுள்ளனர்.

நேற்று 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளும் 07 வயதுடைய பெண் பிள்ளையொருவரும் தமக்கு பசிப்பதாக தெரிவித்துக்கொண்டு பொத்துவில் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இரண்டு நாட்களாக அவர்களது தாயால் அவர்களுக்கு உணவு ஏதும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகளின் தந்தை வௌிநாட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்க்கு வேறொருவர் உணவு கொண்டு வந்து தருவதாகவும் இ தமக்கு அதனை அவர் தருவதில்லை எனவும் அந்த குழந்தைகள் காவற்துறைக்கு தெரிவித்துள்ளனர்.

பின்னர் இ குழந்தைகளுக்கு உணவளித்த காவற்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

அவர் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகளை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கும் வரை அவர்களை உறவினரொருவரின் வீட்டில் ஒப்படைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க