முகங்களை மறைத்தவண்ணம் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரே துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்!

  • Sethu
  • December 07, 2018
69shares

கல்கிஸ்ஸை அங்குலான கல்தேமுல்ல சந்தியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முகங்களை மறைத்தவண்ணம் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தின்போது படுகாயமடைந்த குறித்த இளைஞன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உதார சந்தருவன் என்ற 30 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க