இரணைமடுவில் சிறீதரன் ஜனாதிபதியுடன் நிகழ்வில் கலந்துகொள்ளாதது ஏன்?

75shares

இரணைமடுவுக்கு வருகை தந்த சிறிதரன் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைமடுகுளத்தின் வான்கதவினை திறந்து வைத்து அபிவிருத்தி செய்யப்பட்டபின் குளத்தினை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று(07) இடம்பெற்றது.

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி வருகை தருவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னதாகவே நிகழ்வு இடம்பெற்ற இரணைமடுகுளத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஜனாதிபதியுடன் நிகழ்வில் கலந்து கொள்ளாது பொது மக்கள் கூடியிருந்த இடத்திலேயே நின்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்தவுடன் அங்கிருந்து சென்றுவிட்டார். இவருடன் கரைச்சி மற்றும் பளை பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோரும் காணப்பட்டனர்

இதற்கிடைய வடக்கு மாகாண பணிப்பாளர் மாவட்ட அரச அதிபர் ஆகியோர் வருகை தருமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் சென்று கோரிய போதுதும் அவர் மறுத்துவிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க