மைத்திரிக்கு பேரிடியாய் வந்தது மற்றுமோர் செய்தி!

379shares

சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவர மக்கள் விடுதலை முன்னணி தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் திங்கட் கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணி இந்த முடிவினை எடுத்துள்ளது.

இதேவேளை நாடாளுமன்றத்தைக் கலைத்து மனுதாரரின் அடிப்படை உரிமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீறிவிட்டதாக மீயுயர் நீதிமன்றம் இன்றைய தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி மீதான குற்றவியல் பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க மக்கள் விடுதலை முன்னணி முன்வந்துள்ளது.

எவ்வாறாயினும் ரணிலை தான் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என சற்றுமுன்னர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க