ஐபிசி தமிழ் நிவாரண பணியுடன் கைகோர்த்த புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ்!

158shares

இயற்கை அனர்த்தம் எமது உறவுகளைத் தொடர்ச்சியாக இன்னல்களுக்கு உட்படுத்திய வண்ணம் உள்ளது. இப்பொழுது ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தனால் மக்கள் தத்தளிக்கின்றனர். 14 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி எனும் ஆழிப்பேரலையால் எங்கள் உறவுகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தார்கள்.

அந்த நினைவுகள் மீட்டப்படும் இக்காலகட்டத்தில் மீண்டும் வன்னிமக்கள் மழை வெள்ளத்தால் தங்கள் குடியிருப்புகள், உடைகள் ,உடமைகள் யாவும் இழந்து இன்னல்களுக்கு உள்ளாகித் தவிக்கின்றார்கள்.

இந்நிலையில் மண்ணோடும் மக்களோடும் பணியாற்றிவரும் ஐபிசி தமிழ் தாயகக்கலையகத்தின் விசேட நிவாரண குழு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் களப்பணியில் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் பெருமழை வெள்ளத்தனால் தத்தளிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தேவைப்பொருள்களை ஐபிசி தமிழ் ஊடாக வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னலுறும் மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

அத்துடன் புலம் பெயர் தேசங்களில் வாழ்ந்துவரும் உறவுகள், நிறுவனங்கள், பொது அமைப்புகள் எம்முடன் தொடர்பு கொண்டு வன்னி வாழ் மக்களுக்கு உடனடியாக உதவும் பணிகளில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
“வாட்ஸ் ஆப்” பயனாளிகளின் தனிப்பட்ட பகிர்வு! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

“வாட்ஸ் ஆப்” பயனாளிகளின் தனிப்பட்ட பகிர்வு! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்; ஒருவர்  உயிரிழப்பு

ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி தகவல்

இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி தகவல்